coolpad max dual in one mobile
இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூல்பேட் மேக்ஸ் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.24,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூல்பேட் அமேசான் இணையதளத்தில் மே 30 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலைபேசியின் சிறப்பம்சமே, ஒருவர் தனது சொந்த மற்றும் தொழில் சம்பந்தமான தொடர்புகளை தனித்தனியே பராமரிக்க முடியும். ஆம்! வாட்ஸாப், ஃபேஸ்புக், லைன், பிபிஎம் மற்றும் இவைபோன்ற மற்ற சமூக வலைதளங்களில் தனித்தனி கணக்குகளை இந்த ஒரே கூல்பேடில் வைத்துக்கொள்ள இயலும்.
இரண்டு அலைபேசி வைத்து, இரு தொடர்புகளையும் தனித்தனியே பராமரிப்பவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூல்பேட் இது!
மேலும், இந்த போனின் சிறப்பம்சங்கள்:
5.1 லாலிபாப் ஆபரேடிங் சிஸ்டம்
5.5 இன்ச் எச்.டி. தொடுதிரை
64 பிட் 1.5 GHz ஆக்டா கோர் ஸ்னேப்ட்ரேகன் 617 சிப்செட் ப்ராஸஸர்
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதி
பின்புற கேமரா 13 மெகாபிக்சல், முன்புற கேமரா 5 மெகாபிக்சல்
2800 mAh பேட்டரி (17 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது) 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 3 மணி நேரம் வரை சார்ஜ் நீடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ் கோல்டு மற்றும் ராயல் கோல்டு வண்ணங்களில் கிடைக்கும்.
Comments
Post a Comment